search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்"

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வயநாட்டை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்தகுமார் குடும்பத்தாரை இன்று சந்தித்த பிரியங்கா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். #PriyankaGandhimeets #Pulwamaattack
    திருவனந்தபுரம்:

    காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள்.
     
    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

    இந்நிலையில், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, இன்று மக்கம்குன்னு பகுதியில் உள்ள மறைந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்த குமார் இல்லத்துக்கு சென்றார். வசந்த குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    கேரளாவில் முதல்முறையாக ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவி ஸ்ரீதன்யா சுரேஷ்-ஐயும் அங்கு சந்தித்த பிரியங்கா, அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார். #PriyankaGandhi #PriyankaGandhimeets #Pulwamaattack #VVVasanthaKumar #WayanadVVVasanthaKumar 
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. #PSL #IPL2019
    இஸ்லாமாபாத்:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல்நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    மே மாதம் நான்காம் தேதிவரை நடைபெறும் ஐ.பி.எல். லீக் போட்டிகளை உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் எங்கள் அணி வீரர்கள் விளையாடிய போட்டிகளை ஒளிபரப்ப இந்தியாவை சேர்ந்த பிரபல ஒளிபரப்பு நிறுவனம் மறுத்து விட்டது. 

    இதை எல்லாம் சகித்துகொண்டு இருக்க முடியாது என்பதால் ஐ.பி.எல். போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பவாத் அஹமத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பார்க்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது (பாகிஸ்தானை சீண்டிப்பார்க்கும் வகையில்) இந்திய ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்மீது அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பவாத் அஹமத் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்தின் அதரவுபெற்ற பயங்கரவாதியால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது கடந்த 14-2-2019 அன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதனால், நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கொந்தளிப்பான நிலை ஏற்பட்டிருந்த வேளையில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் இந்திய உரிமத்தை பெற்றிருந்த டிஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அந்த தொடரின் ஒளிபரப்பை தடை செய்திருந்தது நினைவிருக்கலாம். #PSL #IPL2019
    பாகிஸ்தானில் சிக்கி தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் முகத்தை தட்டச்சு இயந்திரம் மூலம் பெங்களூரு நகரை சேர்ந்த ஓவியர் உருவாக்கியுள்ளார். #BengaluruArtist #WingCommanderAbhinandan #Abhinandanportrait
    பெங்களூரு:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது.

    இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்ததையடுத்து அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் முகத்தை தட்டச்சு இயந்திரம் மூலம் பெங்களூரு நகரை சேர்ந்த ஓவியரான ஏ.சி. குருமூர்த்தி என்பவர் ஓவியமாக உருவாக்கியுள்ளார்.

    அபிநந்தன் உண்மையான கதாநாயகன். நமது நாட்டுக்கு அவர் மரியாதை சேர்த்துள்ளார். எனவே, அவரை கவுரவிக்கும் விதமாக இந்த ஓவியத்தை தட்டச்சு இயந்திரம் மூலம் நான் உருவாக்கியுள்ளேன் என்கிறார்,  குருமூர்த்தி. #BengaluruArtist #WingCommanderAbhinandan #Abhinandanportrait #typewriterportrait  
    புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். #Pulwamaattack #NIAinvestigators #MarutiEeco #Pulwamaattackcar #SajjadBhat
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் அனுதாபியான ஆதில் என்பவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
     
    ஆயிரம் கிலோவுக்கு அதிகமான வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரை பயன்படுத்தி இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர், தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 370 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிப்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி ஆதில் என்பவன் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இதற்கு முன்னர் 3 முறை தாக்குதலுக்கான ஒத்திகை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகின.

    காஷ்மீர் மாநில போலீசாரின் விசாரணையில் இருந்த புல்வாமா தாக்குதல் தொடர்பான வழக்கை கடந்த 23-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக் கொண்டது. 

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

    மாருதி இக்கோ (Maruti Eeco) ரகத்தை சேர்ந்தது. அதன் உரிமையாளரான சாஜத் பட் என்பவன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டம், பிஜ்பேஹாரா பகுதியை சேர்ந்தவன். 

    புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் தலைமறைவாகி விட்ட இவனும் ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன். கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி முன்னர் சமூக வலைத்தளங்களில் இவன் சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளான் என்று தேசிய புலனாய்வு படையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Pulwamaattack #NIAinvestigators #MarutiEeco #Pulwamaattackcar #SajjadBhat
    ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் அல் பதர் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter #Al-BadrCommander
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடமாடும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வகையில் குல்காம் மாவட்டம் கத்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று மாலை கத்போரா பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.


    அல் பதர் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ஜீனத்துல் இஸ்லாம் மற்றும் ஷகீல் தார் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு பயங்கரவாத குற்றச்செயல்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #JKEncounter #Al-BadrCommander
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #JKEncounter #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள தூரு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு படையினரும் அந்த பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை முன்னேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் சேவைகளை அதிகாரிகள் நிறுத்திவைத்தனர். #JKEncounter #MilitantKilled
    ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. #JKEncounter #JKMilitantsKilled #Infiltrators
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி பயங்கரவாதிகள் ஊடுருவியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டையை ராணுவம் தீவிரப்படுத்தியது. பன்னார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து அந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது. அதன்பின்னர் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்த சண்டையில் வியாழக்கிழமை 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று கடும் சண்டைக்குப் பிறகு, இரவு தேடுதல் வேட்டை நிறுத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்போது நடந்த மோதலில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்மூலம் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #JKEncounter #JKMilitantsKilled #Infiltrators
    ×